ETV Bharat / state

‘திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை டிசம்பர் மாதம் முடிவடையும்’ - திருவனந்தபுரம் கோட்ட பொது மேலாளர் சர்மா!

திருவனந்தபுரம் கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் என திருவனந்தபுரம் கோட்ட பொது மேலாளர் சர்மா நாகர்கோவிலில் கூறினார்

செய்தியாளர்களைச் சந்தித்த திருவனந்தபுரம் கோட்ட பொது மேலாளர் சர்மா
Etv Bharat
author img

By

Published : Aug 5, 2023, 10:45 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த திருவனந்தபுரம் கோட்ட பொது மேலாளர் சர்மா

கன்னியாகுமரி: நாட்டின் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அம்ரீத்பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், நாட்டில் 1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வு நடத்தி, விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டது. மேலும், ரயில் நிலையங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.881.42 கோடி மதிப்பில், 125 கருத்துருக்கள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டன.

அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், சென்னை கிண்டி, அரக்கோணம், ஈரோடு, கரூர், கோவை வடக்கு, தஞ்சாவூர், தென்காசி, நாகர்கோவில் சந்திப்பு உள்ளிட்ட 60 நிலையங்கள், கேரளாவில் சொரனூர், தலைசேரி, குட்டிப்புரம் உள்பட 26 நிலையங்கள், புதுச்சேரியில் மாஹி, காரைக்கால் ஆகிய 2 நிலையங்கள், கர்நாடகாவில் மங்களூர், ஆந்திராவில் சூலூர் பேட்டை நிலையம் என மொத்தம் 90 நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கிழ் பயணிகள் காத்திருப்போர் அறைகள், ரயில் நிலையத்தில் சிற்றுண்டி கடைகள் அல்லது சிறிய அளவிலான கடைகள் அமைக்கப்படும். ஒரு ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 கடைகள் திறக்கப்படும். ரயில் நிலையத்தின் முக்கியமான இடங்களில் ரயில் வருகை மற்றும் ரயில் புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்களைக் காட்சிப்படுத்தும் டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்படும்.

மேலும், பயணிகளைக் கவரும் வகையில் இயற்கை பூங்காக்கள், செடிகள், மரக் கன்றுகள் நடப்பட்டு அழகுப்படுத்தபடும். அனைத்துப் பகுதிகளிலும் 600 மீட்டர் நீளம் கொண்ட உயர்நிலை நடைமேடை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு ரயில் நிலையங்களில் பணிகள் நடைபெற உள்ளன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு 11 கோடியே 38 லட்சம் ரூபாயும், குழித்துறை ரயில் நிலையத்திற்கு 5.35 கோடி ரூபாயும் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம் ரயில் நிலையத்தின் முன்பகுதி மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (6ஆம் தேதி) நடைபெற உள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்த படி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக நாகர்கோவிலில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட பொது மேலாளர் சர்மா செய்தியாளர்களை கூறுகையில், ”திருவனந்தபுரம் கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிவடையும்.

பால வேலைகள் விரைவாக நடைபெற்று வருகிறது. நில ஆர்ஜிதம் செய்வதில் சில பிரச்சனைகள் மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு இந்த பணிகளை விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக நிலம் எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசுடன் ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறுவது தவறானது.

முதல் கட்டமாக சட்டபூர்வமாக நடவடிக்கைகளை எடுத்து முடித்த பின்னர் நில ஆர்ஜிதம் குறித்து தமிழ்நாடு அரசுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: புலி, சிறுத்தைக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள்.. வனத்துறை விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.