கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே வடக்கு பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் ஆர்வி சுந்தர்ராஜ் (47). இவர், அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை நெடுஞ்சாலையில் உள்ள ஜேம்ஸ்டவுண் சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், அஞ்சுகிராமம் திமுக பேரூர் துணை செயலாளராகவும் உள்ளார்.
அதிகாலை 4.30 மணிக்கு கடையைத் திறக்கும் இவர், இரவு 10 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அதேபோன்று, இன்று அதிகாலை கடையைத் திறப்பதற்காக வந்துபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த பணம் ரூ.12 ஆயிரமும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மளிகை பொருள்களையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுமட்டுமின்றி, பாதுகாப்பு கருதி கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அஞ்சுகிராமம் காவல்துறையினர், திமுக பிரமுகரின் மளிகை கடையில் கொள்ளையடித்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொத்தடிமைகளாக இருந்த 200-க்கும் மேற்பட்ட ஒடிசாவினர் மீட்பு!