ETV Bharat / state

விஷ ஜந்துக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அங்கன்வாடி: உயிருக்கு ஆபத்தான நிலையில் படிக்கும் பச்சிளம் குழந்தைகள்

குமரி மாவட்டத்தில் கட்டையன்விளை பகுதியில் உள்ள அங்கன்வாடியை பலமுறை சரிசெய்து தரக்கோரியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தினமும் பதற்றத்துடன் இருப்பதாக பெற்றோர் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

விஷ ஜந்துக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அங்கன்வாடி: உயிருக்கு ஆபத்தான நிலையில் படிக்கும் பச்சிளம் குழந்தைகள்
விஷ ஜந்துக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அங்கன்வாடி: உயிருக்கு ஆபத்தான நிலையில் படிக்கும் பச்சிளம் குழந்தைகள்
author img

By

Published : Aug 9, 2023, 8:41 PM IST

விஷ ஜந்துக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அங்கன்வாடி: உயிருக்கு ஆபத்தான நிலையில் படிக்கும் பச்சிளம் குழந்தைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதர் மண்டிய விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் ஆபத்தான நிலையில் இயங்கிவரும் அங்கன்வாடியில் பச்சிளம் குழந்தைகள் படித்துக்கொண்டுள்ளனர். நாகர்கோவில் பகுதியில் அங்கன்வாடி கட்டடம் இல்லாததால் ஏற்கனவே இருந்த சமையல் அறையை வகுப்பறையாக பயன்படுத்தி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அங்கன்வாடி என்பது இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். இது 1975ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது. குழந்தைகள் பசியால் வாடி உடல் நலம் குன்றியவர்களாக மாறுவதைத் தடுக்கவும், குழந்தைகளிடம் பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்கவும் அங்கன்வாடி மையங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் இந்த அங்கன்வாடி மையங்கள் பொதுவாக 'பால் வாடி' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் சுமார் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெற்றிடவும் , ஆரம்ப கால கல்வியை கற்று கொள்வதற்காகவும் குழந்தைகள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வளர்வதற்குத் தேவையான அனைத்துப் பணிகளும் இங்கு செயல்படுத்தப்படுகின்றன.

அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 5 வயது நிறைவான குழந்தைகள் தொடக்கப் பள்ளிக்குச் செல்லும்போது அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த அங்கன்வாடிகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றால், இல்லை என்றே கூறலாம். இதனைத் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்டது, கட்டையன்விளை பகுதி. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி கட்டடமானது சில ஆண்டுகளுக்கு முன்னர் இடிந்து விழுந்துள்ளது.

இதையும் படிங்க: சொகுசு காரில் சென்று திருட்டு.. ஆடு, மாடுகள் தான் டார்கெட்.. பலே திருடர்கள் சிக்கியது எப்படி?

அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டித்தரக்கோரி தமிழக அரசிடம் கட்டையன்விளை ஊர் பொது மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தனர். அதனால் அரசும் அதற்கான நிதியை ஒதுக்கி கட்டடம் கட்ட அனுமதி அளித்தது. ஆனால் அதிகாரிகள் பழைய கட்டடத்தின் சமையல் அறை இருந்த இடத்தில் குழந்தைகள் படிக்கும் இடத்தையும், அந்த கட்டடத்தின் உள்ளாகவே மிக சிறிய அளவிலான சமையல் அறை மற்றும் கழிப்பிடம் என கட்டி உள்ளனர்.

அதாவது அங்கன்வாடியின் சமையலறையை வகுப்பறையாக மாற்றி உள்ளனர். அதில் தான் பாடம் நடத்தி வருகின்றனர். தற்போது இருக்கும் கட்டடத்தைச் சுற்றிலும் புதர் மண்டியுள்ளது. பல விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இதில் படிக்கும் சிறார்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாடம் படித்து வருகின்றனர்.

பொதுவாக அங்கன்வாடியில் ஆசிரியர் உடன் ஒரு உதவியாளரும் கூட இருக்க வேண்டும். ஆனால், இங்கு குழந்தைகளைப் பராமரிக்க ஆயாவும் நியமிக்கப்படவில்லை. காற்றோட்டமான சூழலாக இருந்த போதும் மதில் சுவர்கள் இல்லாததால் விஷ ஜந்துக்கள் புகுந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது எனவும் பெற்றோர்கள் வேதனைத் தெரிவித்து உள்ளனர்.

இது சம்பந்தமாக இந்த வார்டு மாநகராட்சி கவுன்சிலர் உதயகுமார் கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திலும், அரசிடமும் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கேட்டு கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால், இதுவரை அரசு தரப்பிலும் மாநகராட்சி தரப்பிலும் எதுவும் கண்டுகொள்ளவில்லை என வேதனைத் தெரிவித்துள்ளார்.

புதிதாக கட்டிய நாகர்கோவில் மாநகராட்சி கட்டடத்தை மேலும் அழகுபடுத்த அண்மையில் 32 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஆனால், ஆபத்தான நிலையில் பச்சிளம் குழந்தைகள் படித்து வரும் இந்த அங்கன்வாடி கட்டடத்தை கட்டித்தர அரசுக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மனமில்லை என்றும் கவலைத் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இதைப் போன்ற அங்கன்வாடி மையங்கள் பல்வேறு பகுதிகளில் சிதைவுற்ற நிலையில் காணப்படுகிறது. ஆகவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இப்படிப்பட்ட அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து அதனை பராமரித்திட முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: குடியாத்தம் அருகே கோயிலில் நுழைந்து சாதுர்யமாக திருடிய இளைஞர்: சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.