ETV Bharat / state

குமரியில் களைகட்டிய ஓணம் பண்டிகை - அத்தப்பூ கோலமிட்டு அசத்தல்!

author img

By

Published : Sep 5, 2022, 5:13 PM IST

தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவ - மாணவிகள் 'மாவேலி சக்கரவர்த்தி' போன்று வேடமணிந்து ஊர்வலமாக வந்தும், விதவிதமான அத்தப்பூ கோலப்போட்டிகளில் பங்கெடுத்தும், வடமிழுத்தல் போட்டிகளுடன் ஓணப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

குமரியில் களைகட்டிய ஓணம் பண்டிகை- அத்தப்பூ கோலமிட்டு அசத்தல்!

கன்னியாகுமரி: கேரளாவில் கடந்த 30ஆம் தேதி அத்தம் தொடங்கியதையடுத்து, ஓணம் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது. அதேபோல், கேரளாவையொட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் மலையாள மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளிலும் விதவிதமாகப்பல்வேறு ஓணகொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கல்வி நிறுவனங்களிலும் அரசு அலுவலகங்களிலும் ஓணப்பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே இலவுவிளைப்பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் ஓணப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையடுத்து கேரளாவில் முக்கிய கலை நிகழ்ச்சிகளான சிங்காரிமேளம், புலிகளி, கதகளியுடனும் கல்லூரி மாணவிகள் பிரத்யேக ஆடை உடுத்தி நடந்து வந்தும், மாணவர்கள் மாவேலி சக்கரவர்த்தி வேடமணிந்தும் ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாணவிகள், அத்தப்பூ கோலப்போட்டியில் கலந்துகொண்டு அத்தப்பூ கோலமிட்டனர்.

குமரியில் களைகட்டிய ஓணம் பண்டிகை - அத்தப்பூ கோலமிட்டு அசத்தல்!

மேலும் ஆண்களுக்கு இணையாக கல்லூரி மாணவிகளும் வடம் இழுத்தல் போட்டியிலும் கலந்துகொண்டு வடம் இழுத்தனர். தொடர்ந்து ஓணசத்யாவுடன் ஓணப்பண்டிகையை கோலாகலத்துடன் கொண்டாடினர்.

இதையும் படிங்க:எகிறும் மதுரை மல்லி விலை... வாடிக்கையாளர்கள் அதிருப்தி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.