ETV Bharat / state

மனைவியை அரிவாளால் வெட்ட முயன்ற கணவன்...பரபரப்பு சிசிடிவி காட்சிகள் - கன்னியாகுமரி மாவட்டம்

நாகர்கோவிலில் துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மனைவியை அவருடைய கணவர் கடைக்குள் புகுந்து அருவாளை கொண்டு வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

துணி கடைக்குள் புகுந்து மனைவியை வெட்ட முயன்ற கணவன்

author img

By

Published : Oct 15, 2022, 2:54 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோஸ்லின். தற்போது நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் தங்கி துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று(அக்.13) முன்தினம் இரவு பணி முடியும் தருவாயில் இளைஞர் ஒருவர் கடைக்குள் நுழைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்த இளம் பெண்ணை வெட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது உடன் பணியாற்றும் இளைஞர் ஒருவர் ஓடி வந்து தடுக்க முயலும் போது அவரையும் வெட்ட முயற்சித்துள்ளார்.

துணி கடைக்குள் புகுந்து மனைவியை வெட்ட முயன்ற கணவன்

இதில் அதிஷ்டவசமாக இருவரும் காயங்கள் இன்றி தப்பினார்கள். பின்னர் கடையில் பணியில் இருந்தவர்கள் கூச்சலிடவே அந்த் நபர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பாகி வைரலாகி வருகிறது.

அதன் சிசிடிவி காட்சிகளை கொண்டு நேசமணி நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அப்பெண்ணை தாக்க முயன்றது அப்பெண்ணின் கணவர் ஆன்றணி என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய கணவர் ஆன்றணியை நேசமணி நகர் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் சிறுது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இன்ஸ்டாவில் "டூயட்" ரீல்ஸ் பதிவிட்ட மனைவியை வெட்டிய கணவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.