கன்னியாகுமரி: மகாத்மா காந்தியடிகளின் 74ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. கன்னியாகுமரி காந்தி மண்டபத்திற்கு கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது தனது குடும்பத்தினருடன் வந்து காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கேரள மாநில ஆளுநர் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - மன்னர் திருமலை நாயக்கரின் 15-ஆம் வாரிசு அசோக் ராஜா