கன்னியாகுமரி மாவட்டம், தாழாக்குடி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடையின் ஒரு பக்கம் சுவரில் முதன்முதலில் ’ஜெய்ஹிந்த்’ முழக்கமிட்ட செண்பகராமன் ஓவியமும், மறுபுறம் ’செக்கிழுத்த செம்மல்’ சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் ஓவியமும் வரையப்பட்டிருந்தது.
இதனிடையே இன்று (ஆக.7) கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு அப்பகுதி திமுகவினர் வ.உ.சிதம்பரனாரின் ஓவியத்தின்மீது கருணாநிதியின் புகைப்படத்தை நிறுவி மாலை அணிவித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கருணாநிதி நான்காம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி