கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்தரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழாவின் கால் கோல் நாட்டும் பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோயில் தந்திரிகளின் சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் கால் நாட்டப்பட்டது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சுசீந்தரம் தாணுமாலயன் சுவாமி கோயிலாகும். இக்கோயிலில் முக்கிய விழாக்களில் மார்கழித் திருவிழாவும் ஒன்றாகும். இவ்விழா பத்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா ஜனவரி ஒன்றாம் தேதி கொடியற்றதுடன் தொடங்கி ஒன்பதாவது நாள் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவினை முன்னிட்டு இன்று கால் கோல் நாட்டும் விழா நடைபெற்றது. சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் கோயில் தந்திரிகள் கோயிலிலிருந்து பூஜை செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட கோலை நாட்டினார்கள். இதில் இந்து அறநிலையத்துறை அலுவலர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:
தேக்கம்பட்டியில் தொடங்கிய புத்துணர்வு முகாம் - செம மேக்கப்பில் வந்த யானைகள்!