ETV Bharat / state

புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயம் பிள்ளைக்கு நன்றி திருப்பலி கொண்டாட்டம் - பேராயர் நரேசன் சூசை தகவல்!

author img

By

Published : Jun 3, 2022, 6:09 PM IST

சமீபத்தில் புனிதர் பட்டம் பெற்ற மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு கன்னியாகுமரியில் நன்றி திருப்பலி கொண்டாட்டம் நடத்தப்படவுள்ளதாக பேராயர் நரேசன் சூசை தெரிவித்துள்ளார்.

புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயம் பிள்ளைக்கு நன்றி திருப்பலி கொண்டாட்டம் - பேராயர் நரேசன் சூசை பேட்டி

கன்னியாகுமரி: கடந்த மாதம் 15ஆம் தேதி ரோம் நகரில் வைத்து போப்பாண்டவரால், மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலம் என்ற சிற்றூரில் பிறந்து, பிற்காலத்தில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையாக மாறி, தன்னுடைய அற்புதமான கால நிகழ்வுகளால் தேவசகாயம் பிள்ளைக்கு இந்தப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், புனிதர் பட்டம் பெற்றது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே அவரை சுட்டுக்கொன்ற புனித இடமான 'காற்றாடி மலைத்தட்டு' பகுதியில், வரும் ஞாயிற்றுக்கிழமை தேசிய அளவிலான நன்றி திருப்பலி கொண்டாட்ட விழா நடைபெற இருப்பதாக கோட்டாறு மறைமாவட்டம் மற்றும் குழித்துறை மறை மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிகழ்வில், ரோம் நகரின் திருத்தந்தையின் இந்தியத்தூதர் லெயோபோல்டா ஜிரஸ்லி உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து சமய மக்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக காற்றாடி மலைப்பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக கோட்டாறு மறைமாவட்ட பேராயர் நசேரன் சூசை இன்று (ஜூன் 3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வருகிற ஞாயிற்றுக்கிழமை தேசிய அளவிலான நன்றி திருப்பலி கொண்டாட்டம் காற்றாடி மலைத்தட்டு பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கான விழா மைதானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் தேசிய அளவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், குறிப்பாக இந்திய திருச்சபையின் பேராயர்கள், ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர் இறைமக்கள், பல்சமய பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பொதுமக்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்விற்கு வருகின்ற அனைவருக்கும் தேவையான மருத்துவ வசதிகள், குடிநீர், கழிப்பிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த விழா மைதானத்தில் கிடைக்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புனிதர் பட்டம் பெறும் முதல் தமிழர் - யார் இந்த தேவசகாயம் பிள்ளை.. திருவாங்கூர் அரண்மனை அதிகாரி டூ புனிதர் வரை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.