ETV Bharat / state

'பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு பிப். 25க்குள் வெளியாகும்' - தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி: பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்  thalavi sundram talks about election date  தளவாய் சுந்தரம்  பூவியூரில் பொங்கல் விழா
'பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் வெளியாகும்'- தளவாய் சுந்தரம்
author img

By

Published : Jan 14, 2020, 11:55 PM IST

உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் பொங்கல்விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூவியூரில் நடைபெற்ற விழாவிற்கு தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 69ஆவது ஆண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

பொங்கல் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அரசுப் பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழர்களுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்.

தற்போது, முதற்கட்டமாக ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் சிறப்பாக நடைபெற்று, அதிமுக அதிக இடங்களைப் பெற்றுள்ளது. வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அவர்களின் பகுதிகளிலுள்ள சாக்கடை, தெருவிளக்கு போன்ற பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க முனைப்புக் காட்டிவருகின்றனர்.

விழாவில் பேசிய தளவாய் சுந்தரம்

அதுபோல மீதமுள்ள பகுதிகளுக்கான குறிப்பாக பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்குள் வெளியாகும்" என்றார். தொடர்ந்து பொங்கல் விழாவில் மாறுவேட போட்டிகள், சிறுவர், பெரியவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'அதிமுக வெற்றிக்கு உதவிய திமுக எம்எல்ஏ ரகுபதிக்கு கோடான கோடி நன்றி'

Intro:தமிழக உள்ளாட்சித்தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 25ம் தேதிக்குள் வெளியாகும் என தமிழகத்திற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தகவல்Body:tn_knk_03_pongal_election_date_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

தமிழக உள்ளாட்சித்தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 25ம் தேதிக்குள் வெளியாகும் என தமிழகத்திற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தகவல்

உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் பொங்கல்விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூவியூரில் நடைபெற்ற விழாவிற்கு தமிழகத்திற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 69வது ஆண்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். பொங்கல் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அரசு பள்ளியில் பயின்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழர்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் தற்போது முதற்கட்டமாக ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற்று அதிமுக அதிக இடங்களை பெற்றுள்ளது. வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களின் பகுதிகளிலுள்ள சாக்கடை, தெருவிளக்கு போன்ற பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முனைப்பு காட்டி வருகின்றனர். அதுபோல மீதமுள்ள பகுதிகளுக்கான குறிப்பாக இந்த பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 25ம் தேதிக்குள் வெளியாகும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பொங்கல் விழாவில் கிராமப்புற பகுதிகளில் பெயர் பெற்ற மாறுவேட போட்டிகள் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.