நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்துள்ள, அரசு மதுபானக்கடையால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வலியுறுத்தி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேலும் 10 நாட்களுக்குள் அரசு மதுபான கடையை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி மதுபான கடைக்குப் பூட்டு போடும் போராட்டம் உட்பட மூன்று கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று காங்கிரஸார் அறிவித்துள்ளனர்.
இதையும் பாருங்க: