கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா வரும் வெள்ளிக்கிழமை 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் பாலஜனாதிபதி கூறுகையில், "ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி திருவிழா வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
அரசு அறிவித்துள்ள தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து கொடியேற்றம் நடக்கும். கொடியேற்றத்திற்கு பின் நடக்கும் பணிவிடைகள், அன்னதானம் போன்றவை வழக்கம் போல நடக்கும். ஆனால் வாகன பவனி, தேரோட்டம், கலை நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகள் நடப்பது குறித்து பிறகு அறிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ரொம்ப போர் அடிச்சது... அதான் சாமிய பாக்க கெளம்பிட்டேன்