தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள விஜய்வசந்த் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது தந்தை வசந்தகுமார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தன்னை தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் செய்த காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோருக்கு நன்றி. எனது தந்தையார் வழியில் காங்கிரஸ் கட்சியில் பயணிப்பதை கடமையாக நினைத்து செயல்படுவேன்.
எனது தந்தை சமாதி அமைந்துள்ள இடத்தில் மணிமண்டபம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். எனக்கு தற்போது பதவி அளிக்கப்பட்டுள்ளது சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பாக செயல்படுவதற்காகவே.
தமிழ்நாட்டில் திரையரங்குகள் நூறு விழுக்காடுடன் செயல்படுவது மகிழ்ச்சியே என்றாலும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் எனது தந்தையின் கனவுகளை நிஜமாக்கவும், அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடரவும் பாடுபடுவேன்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக விஜய் வசந்த் தேர்வு!