இந்து தெய்வங்களையும் இந்துக்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் வி.சி.க தலைவர் திருமாவளவனை கண்டித்தும், அவரை கைது செய்யக் கோரியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அகில பாரத இந்து மகாசபாவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அகில பாரத இந்து மகாசபாவினர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அகில பாரத இந்து மகாசபா மாநில இளைஞர் அணி செயலாளர் துரைராஜ் கூறுகையில், "இந்து தெய்வங்களையும் இந்துக்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி திருமாவளவன் பேசிவருகிறார். இப்படி எந்த தலைவர்களும் பேசியதில்லை.
இந்துக்களை குறைத்து பேசும் அவர், கிறிஸ்தவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ குறைத்து பேசினால் பல்லக்கில் வைத்து சுமக்கிறோம். அவர் அப்படி பேசியதை வன்மையாக கண்டிக்கின்றோம். காவல்துறையை நாங்கள் நம்புகின்றோம் அவர்கள் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: திமுக - விசிக கூட்டணியில் உரசல்? - காரணம் இதுதான்!