ETV Bharat / state

வெங்கடாஜலபதி கோயிலில் சுப்ரபாதம் தரிசனம் தற்காலிக நிறுத்தம் - Tirupati Venkatajalapathy Temple

கன்னியாகுமரி: விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சுப்ரபாதம் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுப்ரபாதம் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தம்
சுப்ரபாதம் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தம்
author img

By

Published : Dec 18, 2019, 10:55 PM IST

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாத தரிசனம் நடைபெறும்.

பின்னர் இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும். தற்போது மார்கழி திருவிழா தொடங்கியுள்ள நிலையில் அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை காலை 6 மணிக்கு நடைபெற்றுவந்த சுப்ரபாதம் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுப்ரபாதம் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தம்

அதற்கு பதிலாக தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் கோயில் அர்ச்சகர்களால் திருப்பாவை பாடப்பட இருக்கிறது. தொடர்ந்து, 5.30 மணி முதல் 6 மணிவரை ஆண்டாளுக்கு அபிஷேகமும், நிவேத்யமும் படைக்கப்பட உள்ளது.

மார்கழி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு காலையில் பொங்கல், மதியம் தயிர் சாதம், மாலையில் புளியோதரை, இரவு மிளகு சாதமும் வழங்கப்பட இருக்கின்றன.

இதையும் படிங்க: தி.மலை கிளி கோபுரத்தில் திரும்பப் பெறப்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்பு

Intro:திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயிலில் சுப்ரபாதம் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.Body:tn_knk_01_subrapatham_nirutham_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயிலில் சுப்ரபாதம் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாத தரிசனம் நடந்து வருகிறது. இரவு 8 மணிவரை தொடர்ந்து நடை திறந்து இருக்கும். இந்நிலையில் மார்கழி திருவிழா தொடங்கியுள்ள நிலையில் அடுத்த மாதம் 14-ம்தேதி வரை காலை 6 மணிக்கு நடந்து வந்த சுப்ரபாதம் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஓரு மணிநேரம் முன்பாக (அதிகாலை 5 மணிக்கு ) நடைதிறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் கோயில் அர்ச்சகர்களால் திருப்பாவை பாடப்படுகிறது. 5.30 மணிமுதல் 6 மணிவரை ஆண்டாள் தாயாருக்கு அபிஷேகமும், நிவேத்யமும் படைக்கப்படுகிறது. மார்கழி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு காலையில் பொங்கல், மதியம் தயிர்சாதம், மாலையில் புளியோதரை, இரவு மிளகு சாதம் வழங்கபடுகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.