கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலும் ஒன்று. இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று மதியத்திற்கு மேல் அமாவாசை தொடங்கியதால் இன்று சுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. பொதுவாக கேரளாவில் பின்பற்றப்படும் பஞ்சாங்க முறையையே இங்கும் பின்பற்றப்படுகிறது. இங்குள்ள 18 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு பால், தயிர், நெய், தேன், களபம், சந்தனம், குங்குமம், எலுமிச்சை சாறு, பஞ்சாமிர்தம், மாதுளைச்சாறு, உள்பட 16 வகையான சோடச அபிஷேகம் செய்யப்படுகிறது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா!
கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அங்குள்ள 18 அடி கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகை பொருட்களுடன் சோடச அபிஷேகம் நடைபெற்று வருகிறது.