கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணத்தில் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பொதுமக்களிடம் உரையாடினார்.
அப்போது பேசிய அவர், "புயல் முன் எச்சரிக்கை தொடர்பாக 14 விசைப்படகுகளுக்கு இதுவரையிலும் தகவல் கொடுக்க முடியவில்லை. மற்ற விசைப்படகு மீனவர்கள் அந்தந்த துறைமுகங்களுக்கு வந்துகொண்டிருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை துறைமுகத்தில் செய்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து, “மீனவர்களுக்குத் தகவல் கொடுப்பதில் சிரமமாக உள்ளது. அர்கள் வைத்திருக்கும் சேட்டிலைட் போனை ஆன் (on) செய்தால் மட்டுமே தகவல் வந்துசேரும். அவர்கள் இன்னும் ஆன் செய்யவில்லை. இருந்தும் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றோம்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “அணைகள் தற்போதுவரை பாதுகாப்பான நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்கவைக்கவும் அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்றார்.