கன்னியாகுமரி மாவட்டம் கடல் பகுதியில் இன்று (டிச.21) காற்றின் வேகம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுர் சிலைக்கு செல்லும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்கரையோரம் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கடல் சீற்றத்தால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதையும் படிங்க: கடல் சீற்றத்தால் ஆபத்து; தடுப்புச்சுவர் கட்டிதர மீனவர்கள் வேண்டுகோள்!