கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் இன்று (ஜூன் 18) தொடங்கின. இதில் கால்பந்தாட்டம், 100 மீட்டர், 200 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் மாநில, பல்கலைக்கழக அளவிலான அணிகளுக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் வேலை வாய்ப்புகளில் கூட விளையாட்டு பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடுகள் இருப்பதால் மாணவர்கள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் விழாக்குழுவினர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். பின்னர், கல்லூரி நிர்வாக குழு கன்னியாஸ்திரிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
இதையும் படிங்க: இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலக சாதனை