கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கரோனா தொற்று காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. நாகராஜா கோயிலில் இந்நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் 13 அடி உயரம் கொண்ட சூரன் சிலை அமைக்கப்படும். ஆனால், இம்முறை 5 அடி அளவு கொண்ட சூரன் சிலை அமைக்கப்பட்டது.
அதன் மீது வழக்கமாக சூரபத்மன், சிங்கன், தாரகன், அஜமுகி என நான்கு தலைகள் பொருத்தப்படும். இந்த ஆண்டு கரோனா காரணமாக சூரபத்மன் தலை மட்டுமே பொருத்தப்பட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
குறைந்த அளவிலான பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பெருமளவு பக்தர்கள் கோயில் வளாகத்திற்கு வெளியே நின்று சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்க் கடவுளை அசிங்கப்படுத்தினால் காவிப் படை எதிர்த்து நிற்கும்' - எல். முருகன்