ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தைச் சுற்றியுள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடிச் சென்று வழிபடுவது வழக்கம். இந்த சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. திருமலை மகாதேவர் கோயிலில் இந்த ஓட்டம் தொடங்கியது.
இதில், பங்கேற்ற பக்தர்கள் 120 கிலோ மீட்டர் தூரங்களில் உள்ள 12 சிவாலயங்களையும் ஓடிச்சென்று வழிபடவுள்ளனர். நேற்றிரவு தொடங்கிய இவ்வொட்டத்தில் ஏராளமான பக்தர்கள் காவி உடை உடுத்தியும் கையில் விசிறியுடனும் கலந்து கொண்டனர்.
கோவிந்தா, கோபாலா என்று பக்தி முழக்கத்துடன் செல்லும் இந்த பக்தர்கள் ஓட்டத்தை இன்று மாலை நட்டாலத்தில் உள்ள சங்கர நாராயணர் கோயிலில் நிறைவு செய்யவுள்ளனர். இந்நிகழ்வில் குமரி மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடி, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பங்குபெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: மகாசிவராத்திரி: உலகம் முழுவதுமிருந்து சிவன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்