அகஸ்தீஸ்வரம் விவேனந்தா கல்விக் கழகத்திற்குள்பட்ட அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரியும் கூடங்குளம் அணுமின் நிலையமும் இணைந்து நடத்தும் அறிவியல் கண்காட்சி இரண்டு நாள்கள் நடைபெற்றுவருகிறது
முதல்நாள் அறிவியல் கண்காட்சியை மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிருந்தா தொடங்கிவைத்தார். கண்காட்சியில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 53-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளைப் பார்வைக்கு வைத்திருந்தனர்.
அறிவியல் கண்காட்சியில் இடம்பெறும் சிறந்த படைப்புகளுக்கு பரிசுத் தொகை, சுழற்கோப்பைகள், இதர பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: சரவணா ஸ்டோரில் விலையுயர்ந்த துணிகளைத் திருடிய ஊழியர் கைது