கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா ஜனவரி 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களின்போது காலை, மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, அன்னதானம், கலைநிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
8ஆம் நாளன்று அய்யா குதிரை வாகனத்தில் முத்திரிக்கிணறு அருகே கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 11ஆம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலை, அய்யாவுக்கு பணிவிடை நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு அய்யா பஞ்சவர்ண தேரில் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பூஜிதகுரு பாலஜனாதிபதி தலைமை வகித்தார்.
இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டு "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" என்ற கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யாவுக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பூ ஆகியவற்றை சுருளாக வைத்து வணங்கினர்.
இதையும் படிங்க: 'டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பான தகவல்களை சிபிசிஐடிக்கு தர தயார்'