ETV Bharat / state

ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்: எச்.வசந்தகுமார்

கன்னியாகுமரி: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று, குமரி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் உறுதியளித்துள்ளார்.

எச்.வசந்தகுமார்
author img

By

Published : Apr 2, 2019, 8:14 PM IST

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், குமரி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

கன்னியாகுமரி மாவட்டத்தில்ரூ.40 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குமரி தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், உண்மைக்கு புறம்பாக பேசி வருவதாகவும், அந்தப் பணம் எப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக வாக்குறிதி அளித்துவிட்டு, தற்போது பக்கோடா விற்று தொழில் செய்யுங்கள் அல்லது வாட்ச்மேனாக பணியாற்றுங்கள் என்று கூறியதை சுட்டிக்காட்டினார்.

எச்.வசந்தகுமார்

இதையடுத்து செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களை தொகுதியில் தான் வெற்றி பெற்றால் ராகுல் அறிவித்த இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று எச்.வசந்தகுமார் உறுதியளித்தார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்ட பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குமரி சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தான் வெற்றி பெற்றால் ராகுல் அறிவித்த மாதம் 6 ஆயிரம் ரூபாய் பணத்தினை குமரி மக்களுக்கு பெற்றுத் தருவதற்கு முதல் நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.

Body:குமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் குமரி சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தீவிர பிரச்சாரத்திற்கு இடையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
குமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தில் 40 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பொய் கூறி கொண்டு இருக்கிறார். அந்தப் பணம் எப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
மோடி இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று கூறினார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டால் பக்கோடா விற்று தொழில் செய்யுங்கள் அல்லது வாட்ச்மேன் தொழில் செய்யுங்கள் என்று கூறுகிறார்.
அதேபோல பொன்ராதாகிருஷ்ணன் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வாங்கித் தருவதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை அவர் அதனை செய்யவில்லை. வாக்குறுதி அளித்த பொன்ராதாகிருஷ்ணன் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. அப்படிப்பட்ட அவர் எப்படி பொது மக்களிடம் வாக்கு கேட்கலாம்.
பிஜேபி பொய் தான் கூறுவார்கள், மக்கள்தான் அவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். ராகுல் காந்தி ஏழை மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளார். நான் வெற்றி பெற்றால் முதல் வேலையாக ராகுல் காந்தி அறிவித்த அந்த ஆறாயிரம் ரூபாயை குமரி மக்களுக்கு பெற்றுத் தருவதற்கு முதல் நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.