ETV Bharat / state

கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

author img

By

Published : Nov 4, 2020, 2:09 PM IST

கன்னியாகுமரி: ஹோட்டல் உரிமையாளரின் காரை உடைத்து ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Robbery
Robbery

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே காரத்திக் என்பருக்கு செந்தமான ஹோட்டல் உள்ளது.

கார்த்திக் நேற்றிரவு (நவம்பர் 3) ஹோட்டலின் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்காக தனது காரில் வந்தார். காரை ஹோடலின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அடையளம் தெரியாத நபர்கள் கார்த்திக்கின் கார் கண்ணாடியை உடைத்து காரினுள் இருந்த ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து கார்த்திக் காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கவே வடசேரி காவல் துறையினர், சிறப்பு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சிசிடிவி காட்சிகளில் சில இளைஞர்கள் அப்பகுதியில் நோட்டம் விடுகின்றனர். பின்னர் ஒருவர் காவலாளியிடம் பேச்சுக் கொடுத்து அப்பகுதியில் இருந்து அழைத்து செல்வது பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு வரும் மற்றொருவர் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு சென்றுவிடுகிறார். பின்னர் இன்னொரு இளைஞர் காருக்குள் கையைவிட்டு பண பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிடுகிறார். இதனை அடிப்படையாக கொண்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.