கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் டாஸ்மாக் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (டிச.05) பிற்பகல் செண்பகராமன் குடோனில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் மினி லாரி மூலமாக தோவாளை அருகே சானல் கரையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, மரத்தில் மோதிக் கவிழந்தது. இந்த விபத்தின்போது அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த மது பாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன. இதில், லாரியின் ஓட்டுனர், க்ளீனர் ஆகியோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசாமாக உயர் தப்பினர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரல்வாய்மொழி காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டிப்பர் லாரி மோதல்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பெண்!