கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதாக இருந்தது. இதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவசரகதியில் சாலைகள் அமைக்கப்பட்டன.
பின்பு, முதலமைச்சரின் குமரி வருவகை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த சாலைகள் அனைத்தும் பெயர்ந்து நாசமாயின. இதற்கு குமரி மாவட்ட எம்எல்ஏக்கள் கண்டனம் எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணிகள் இன்று (அக்டோபர் 29) நடைபெற்றன. ஆனால், ஏற்கனவே இருக்கும் சாலையை பெயர்த்து அதன் மேல் ஜல்லி கொட்டி புதிய சாலை அமைக்காமல், பழைய சாலை மீது சிறிது அளவு தார் ஊற்றி அதன் மீது தரமற்ற வகையில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.