ETV Bharat / state

பல கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை: ஒருநாள் மழைக்கு தாங்காத அவலம் - kanniyakumari collector office

கன்னியாகுமரி: குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பல கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த சாலை சேதமான நிலையில், டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் மீதும், அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
author img

By

Published : Oct 15, 2020, 9:45 PM IST

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருந்நது. கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை பணிகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 13ஆம் தேதி குமரி மாவட்டம் வருவதாக இருந்தது.

இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதன்படி கலெக்டர் அலுவலக கட்டிடம் வர்ணம் பூசி புதுப்பித்தல், அலுவலக வளாகத்தில் உள்ள சாலைகளை சீர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவசர கதியில் பல கோடி ரூபாய் செலவில் அலுவலக வளாகத்தில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டது. இதற்கிடையில், முதலமைச்சரின் தாயார் மறைவைத் தொடர்ந்து அவரின் குமரி வருகை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதில், முதல் நாள் பெய்த மழையிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக போடப்பட்ட தார்சாலை பெயர்ந்து ஜல்லி தனியாக அதற்கான கலவை தனியாக வந்து விட்டது.

காலால் தேய்த்தாலே பெயர்ந்து விழும் அளவுக்கு அதன் நிலைமை மாறியுள்ளது. அதேநேரத்தில் கடந்த இரண்டு நாள்களாக இந்த சாலை வழியாக தான் மாவட்ட கலெக்டரும், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற துறை உயர் அலுவலர்களும் தினமும் வந்து செல்கின்றனர்.

எனினும், சாலை அமைக்கப்பட்டு இரண்டு நாளில் இவ்வளவு மோசமானது குறித்து ஆட்சியர் உள்பட எந்த அலுவலர்களும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இதுபோல் ஏற்கனவே இதற்கு முந்திய முறை முதலமைச்சர் வருவதாக இருந்தபோதும் அவசரகதியில் போடப்பட்ட அனைத்து சாலைகளும் தற்போது சேதமடைந்து படு மோசமான நிலையில் உள்ளன.

எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தரமற்ற சாலையை அமைத்த தனியார் நிறுவனம் மீதும் அதற்கு அனுமதி அளித்த அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.