கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு சொகுசு வாகனங்கள், அரசு பேருந்துகள், ரயில்கள் மூலமாக ரேஷன் அரிசி தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வந்தது. இதனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தாலும், கடத்தல்காரர்கள் காவல் துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தொடர்ச்சியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி வருகின்றனர்.
இச்சூழலில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து குடிமைப்பொருள் அலுவலர்கள் பூதப்பாண்டி அருகே சந்தேகத்திற்கிடமாக வந்துகொண்டிருந்த லாரியை மடக்கி விசாரணை செய்தனர்.
பல நாள்கள் வன்புணர்வு...16 பேர்... 16 வயது சிறுவன்! - அதிர்ச்சி பிண்ணனி?
அப்போது, லாரியின் ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசவே, வாகனத்தில் ஏறி சோதனை செய்தபோது, நெல், உமி ஆகிய மூட்டைகளுக்கு அடியில் ரேஷன் அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அரிசியை பறிமுதல் செய்த அலுவலர்கள் குடிமைப்பொருள் அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் ஆனந்த நம்பி என்பவர், குறிச்சிப் பகுதியிலிருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்குக் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஓட்டுநர் சின்ன இசக்கி என்பவரை குடிமைப்பொருள் அலுவலர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.