ETV Bharat / state

குமரியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்! - கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல்

கன்னியாகுமரி:  குமரியிலிருந்து கார், ரயில் மூலம் கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற 1400 கிலோ ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல், தடுப்புப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ration rice smuggling from kanniyakumari
author img

By

Published : Nov 19, 2019, 3:19 PM IST

குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைக் கேரளாவிற்கு கடத்தி, அங்கு அதிக விலைக்குச் சில கும்பல்கள் விற்பனை செய்து வருகின்றன. காவல் துறையினர் இதனைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி புதுப்புது முறைகளில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு இந்தக் கும்பல் தொடர்ந்து கடத்தி வருகின்றது.

குமரியிலிருந்து இதற்கு முன்பு அரசுப் பேருந்து, ரயில்களின் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி வந்த இந்தக் கும்பல், தற்போது சொகுசு கார்களில் ரேஷன் அரிசியை புதுமையான முறையில் கடத்தி வருகின்றனர். இதனைத் தடுக்க மாவட்ட உணவு வழங்கல் துறையினர், பறக்கும் படை அலுவலர்கள் ஆகியோர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில் ராஜாக்கமங்கலம் பகுதியில் சொகுசு காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற அலுவலர்கள், காரில் கடத்த முயன்ற 400 கிலோ கிராம் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அதனைக் கடத்தி வந்த கேரள மாநிலம் சிறிய கொல்லா பகுதியைச் சேர்ந்த விகாஸ்(24) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி

இதேபோல, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கேரளாவுக்குக் கடத்துவதற்காக சிறிய மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 கிலோ கிராம் ரேஷன் அரிசியையும் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: ரேஷன் கடையை செயல்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர் நூதன போராட்டம்!

Intro:கன்னியாகுமரி:  குமரி மாவட்டத்தில் இருந்து கார் மற்றும் ரயில் மூலம் கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற 1400 கிலோ ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Body:குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி அங்கு அதிக விலைக்கு ரேஷன் அரிசியை சில கும்பல்கள் விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் இதனை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி கொண்டு புதுப்புது முறைகளில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு இந்த கும்பல் தொடர்ந்து கடத்திய வண்ணம் உள்ளனர்.

 குமரி மாவட்டத்தில் இருந்து இதற்கு முன்பு அரசு பேருந்து, ரயில்களின் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி வந்த இந்த கும்பல், தற்போது சொகுசு கார்களில் ரேஷன் அரிசியை புதுமையான முறையில் கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட உணவு வழங்கல் துறை மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 அந்த வகையில் ராஜாக்கமங்கலம் பகுதியில் சொகுசு காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படை அங்கு சென்ற அதிகாரிகள் காரில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன் கேரள மாநிலம் சிறிய கொல்லா என்ற இடத்தை  சேர்ந்த விகாஸ் (வயது 24) என்பவரை  பிடித்து விசாரித்து வருகின்றனர். 

இது போல நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கேரளாவுக்கு கடத்துவதற்காக சிறிய மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசியையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.