கன்னியாகுமரி மாவட்டம், மத்தியோடு பகுதியில் ஐடிஐ நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இதில் மாங்கரை, முள்ளங்கினாவிளை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் படித்துவருகின்றனர். இவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் மாணவியை வீட்டிற்கு பின்னால் அழைத்த மாணவர்கள் இருவரும், தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடந்த அந்த மாணவி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதேபோல் கடந்த 20ஆம் தேதி அதேப் பகுதியைச் சேர்ந்த லியோ(25) என்ற இளைஞர், மாணவியை காதலிப்பதாக கூறி திப்பிரமலைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.
இதிலும் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மூன்று பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.