ரயில்வே தொழிலாளர்களுக்கு 2020ஆம் ஆண்டு வழங்க வேண்டிய போனஸ் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அதனை உடனடியாக வழங்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் இன்று (அக்.20) போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யு., தொழிற்சங்கம் சார்பில் போனஸ் தொகை வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் தெரிவித்ததாவது, "கரோனா ஊரடங்கு காலத்திலும் ரயில்வே தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை பார்த்து வருகிறோம். எனினும் மத்திய அரசு 2020ஆம் ஆண்டு வழங்க வேண்டிய போனஸ் தொகையை இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் எங்களிடம் நடத்தவில்லை.
ஆகவே உடனடியாக ரயில்வே தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் தொகையை வழங்க வேண்டும், இல்லை என்றால் வருகின்ற 22ஆம் தேதி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு!