கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புரெவி புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் நேற்று முன்தினம் (டிசம்பர் 2) முதல் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் போடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் இன்று இவை அகற்றப்பட்ட பின்னரும் சுற்றுலாப் பயணிகள் தென்படவில்லை. இதனால் தொடர்ந்து மூன்றாவது நாளாக பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் இன்றி சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதனிடையே இன்று காலை முதல் இரவு வரை மாவட்டத்தில் கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும் என ஐ.எம்.டி. அறிவித்துள்ள நிலையில் கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர், தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் எனப் பல்வேறு குழுவினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.