கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கடற்கரை கிராமம் தேவாலயம் முன்பு 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பங்குப்பேரவை நிர்வாகிகள் தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறும்போது, "ஆயர்கள் பெயரில் தேவாலய மாதாவிற்கு சொத்து வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் ஆளுங்கட்சியினரின் தலையீடு உள்ளது. ஆயர் இல்லத்தில் முறையான பதில் எங்களுக்குத் தரப்படவில்லை" என்றனர்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்தை இயக்கக்கோரி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் கைது!