ETV Bharat / state

இடிந்த நிலையிலுள்ள பள்ளியை சீரமைக்கக் கோரி சாலை மறியல்

கன்னியாகுமரி: இடிந்த நிலையில் காணப்படும் அரசு மேல்நிலைப் பள்ளியை சீரமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளியை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் கட்சியினர் போராட்டம்
author img

By

Published : Jun 13, 2019, 10:02 AM IST

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள இரணியல் பகுதியில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளி 1899ஆம் ஆண்டு மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்தப் பள்ளியானது 1999ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கண்டது. தற்போது இந்தப் பள்ளி 120ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைக்க உள்ளது.

இங்கு நூற்றாண்டு பழமைவாய்ந்த கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள பத்து வகுப்பறைகள் ஓக்கி புயலின்போது முற்றிலுமாக சேதமடைந்தது. இதனையடுத்து மேல்நிலைப் பயிலும் மாணவர்கள் தற்காலிக வகுப்பறைகளில் சுழற்சி முறையில் கல்வி கற்றுவருகின்றனர். இது குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் புகாரளித்தும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

பள்ளியை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் கட்சியினர் போராட்டம்

இதனால் சேதமடைந்த பள்ளி வகுப்பறை கட்டடங்களை உடனடியாக சீரமைக்கக் கோரியும் கட்டடங்களை சீரமைக்காமல் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக கல்வித் துறை அலுவலர்கள் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் கட்சி சார்பில் 50-க்கு மேற்பட்டோர் பேரணியாக நடந்துவந்து பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை கைது செய்த காவல் துறையினர் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவத்தால் திங்கள்சந்தை - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடிந்த நிலையில் காணப்படும் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை சீரமைக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல் நிலைப் பள்ளி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 1899--ஆம் ஆண்டு மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பள்ளியானது 1999-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கண்டு தற்போது நூற்றி இருபதாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க உள்ளது. 
இங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள  பத்து வகுப்பறைகள் கட்டிடங்கள் ஒக்கி புயலின் போது மேற்கூரை முற்றிலுமாக சேதமடைந்தது. இதனையடுத்து மேல்நிலை பயிலும் மாணவர்கள் தற்காலிக வகுப்பறையில் சுழற்ச்சி முறையில் கல்வி கற்று வருகின்றனர்.
 இது குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் புகாரளித்தும் எந்த பலனும் இல்லாததால் சேதமடைந்த பள்ளி வகுப்பறை கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க கோரியும் கட்டிடங்களை சீரமைக்காமல் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக கல்வி துறை அதிகாரிகள் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் கட்சி சார்பில் 50-க்கு மேற்பட்டோர் பேரணியாக நடந்து வந்து பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
 அவர்களை கைது செய்த போலீசார் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவத்தார் திங்கள்சந்தை நாகர்கோவில் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.