ETV Bharat / state

ஆளே இல்லாத வீட்டுக்கு ரூ. 5,800 மின் கட்டணம்

கன்னியாகுமரி: மணக்குடி மீனவ கிராமத்தில் ஆளே இல்லாத வீட்டுக்கு 5,800 ரூபாய் மின் கட்டணம் போடப்பட்டது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Electricity bill amount
Electricity bill amount
author img

By

Published : Jun 17, 2020, 3:26 PM IST

கன்னியாகுமரி அருகே மணக்குடி மீனவ கிராமத்தில் மின் கட்டண வசூலில் குளறுபடி காணப்படுவதாகவும், மின் கட்டணம் பத்து மடங்கு வரை உயர்ந்துள்ளதாகவும் மீனவப் பெண்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏற்கனவே கரோனா தொற்று பீதியினால் மீன்பிடித்தொழில் இன்றி, மீனவ மக்கள் வறுமையில் தவித்துவரும் வேளையில், வழக்கமான மின் கட்டணத்தை விட அதிக கட்டணம் வந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மணக்குடி கிராமத்தில் நவஜீவன் நகரில் கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்ட நிலையில் உள்ள வீட்டிற்கு மின் கட்டணம் கடந்த பல மாதங்களாக வசூலிக்கப்படவில்லை. ஆனால் தற்போது திடீரென அந்த வீட்டிற்கான மின் கட்டணம் 5 ஆயிரத்து 800 ரூபாய் என மின் ஊழியர்களால் எழுதப்பட்டிருந்தது.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, தங்கள் வீடுகளிலும் ஏற்கனவே செலுத்தப்பட்டு வந்த மின் கட்டணம் தற்போது பன்மடங்கு உயர்ந்திருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த மாதம் 95 ரூபாய் மின் கட்டணம் செலுத்திய வீடுகளில் 905 ரூபாய் மின் கட்டணம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மின்வாரிய கட்டண நிர்ணயத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த குளறுபடியால் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மின் துறை அலுவலர்களை கேட்டால், தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், உயர் அலுவலர்களின் வழிகாட்டுதலில்தான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதனால் மின் கட்டணத்தைச் செலுத்துவதற்கான வருமானம் இல்லை என்ற போதிலும் மின்சாரத்தை ரத்து செய்து விடுவார்கள் என்ற அச்சத்தோடு கடன் வாங்கி மின் கட்டணத்தை செலுத்தவேண்டியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.