ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி

மத்திய அரசு கொண்டு வந்த சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மற்றும் இஸ்லாமியர்களின் அனைத்து கூட்டமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி
author img

By

Published : Jan 26, 2020, 6:51 PM IST

செங்கல்பட்டு:

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்களின் அனைத்து கூட்டமைப்பு சார்பில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் தேசியக் கொடியை ஏந்தி கலந்துகொண்டனர். மேலும் செங்கல்பட்டு ராட்டின கிணறு அருகே ஆரம்பித்த இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி

கன்னியாகுமரி:

நாகர்கோவிலில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் பேரணி

இதையும் படிங்க:குடியுரிமை திருத்தச் சட்டம்: உத்தரப் பிரதேசத்தில் தொடரும் பெண்கள் போராட்டம்

Intro:செங்கல்பட்டில் என்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி முஸ்லிம்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது

Body:செங்கல்பட்டில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டமான குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி முஸ்லிம்கள் கூட்டமைப்பு சார்பாக பேரணி நடத்தப்பட்டது

இந்தப் பேரணியில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களாகCAA, NRP, NRC, ஆகிய சட்டங்களை திரும்பப் பெற்று முஸ்லிம்களுக்கு ஆதரவான சட்டத்தை கூடிய விரைவில் அமல்படுத்த வேண்டும். எனவும் இந்தியர்களாக பிறந்த நாங்கள் வாழும் வரை இந்தியர்களாகவே வாழ வழி வகை செய்ய வேண்டும் எனவும்

மத்தியஅரசு வரும் ஏப்ரல் மாதம் NRP என்கின்ற சட்டத்தை அமல் படுத்தப் போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்த நிலையில் அத்தகைய சட்டத்தினை அமல்படுத்தாமல் முஸ்லிம்களுக்கு ஆதரவான சட்டத்தினை கூடிய விரைவில் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Conclusion:செங்கல்பட்டு ராட்டின கிணறு அருகே ஆரம்பித்த இந்த பேரணி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது இந்த பேரணியில் முஸ்லிம்களின் அனைத்து கூட்டமைப்பு சார்பில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என அனைவரும் தேசியக் கொடியை ஏந்தி கலந்துகொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.