குமரி மாவட்டம், நாககோடு பகுதியில் புனித அந்தோணியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பங்கில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். மடத்தூர்கோணம் பகுதியில் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன், கல்லறை தோட்டத்திற்கு என 49 சென்ட் நிலத்தை வாங்கியது ஆலய பங்கு நிர்வாகம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 24 ஆண்டுகளாக, அந்த பங்கில் உள்ளவர்களை, இந்த நிலத்தில் அடக்கம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஆலயத்தில் குடும்பங்கள் அதிகமாகி உள்ளதாகக் கூறி, இறந்தவர்களை நவீன முறையில் அடக்கம் செய்ய, ஏழு அடுக்குகளைக் கொண்ட கான்கிரீட்டிலான பாக்ஸ்-கள் கட்ட நிர்வாகம் தீர்மானம் செய்தது.
இதற்கான பணிகள் நேற்று (ஜூலை 17 ) தொடங்கப்பட்ட நிலையில், நவீன கல்லறை கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் ஆய்வாளர் ராஜ சுந்தர், வருவாய் ஆய்வாளர் சாந்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.