ETV Bharat / state

மாணவியிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேராசிரியர் கைது - முனைவர்

கன்னியாகுமரி: ஆயு்வுக் கட்டுரை சான்றிதழுகாக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

culprit
author img

By

Published : Aug 5, 2019, 4:34 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரசல்ராஜ். இவர் மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், ரசல்ராஜ் தனக்கு கீழ் முனைவர் ஆராய்ச்சி பயின்று வரும் மாணவி கிளாடிஸ் புளோரா என்பவரிடம் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பண சான்றுக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதற்கு சம்பந்தம் தெரிவித்த கிளாடிஸ் பணத்தை மார்த்தாண்டம் பகுதியில் வைத்து இன்று தருவதாக ரசல்ராஜ்க்கு வாக்குறுதி அளித்ததோடு, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, மார்த்தாண்டத்தில் வைத்து லஞ்சம் வாங்கிய ரசல்ராஜை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேராசிரியர் கைது

Intro:கல்லூரி மாணவியிடம் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு கட்டுரை சமர்ப்பணம் சான்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட மதுரை அரசு கல்லூரி வரலாற்று பேராசிரியர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது. Body:tn_knk_01_vijilence_professor_arrested_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கல்லூரி மாணவியிடம் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு கட்டுரை சமர்ப்பணம் சான்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட மதுரை அரசு கல்லூரி வரலாற்று பேராசிரியர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது.

மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியராக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ரசல்ராஜ் என்பவர் பணி புரிந்து வருகிறார்.இவர் தனக்கு கீழ் Ph.D ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் புத்தன் சந்தை பகுதியை சேர்ந்த மாணவி கிளாடிஸ் புளோரா என்பவரிடம் ஆய்வு கட்டுரை சமர்ப்பண சான்றுக்கு 50,000 கேட்டுள்ளார். ரசல் ராஜ் கேட்ட பணத்தை மார்த்தாண்டம் பகுதியில் வைத்து இன்று தருவதாக கூறிவிட்டு கிளாடிஸ் புளோரா தனது கணவர் பிஜு மோன் உடன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தனர் .புகாரில் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் கண்காணிப்பில் இன்று பேராசிரியர் ரசல்ராஜ் மாணவியிடம் 25,000 ரூபாய் வாங்கிய போது மார்த்தாண்டத்தில் வைத்து கையும் களவுமாக சிக்கினர் அதனை தொடர்ந்து அருகில் இருந்த மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ரசல்ராஜ் வாங்கிய ரூபாய் 25000 த்தை கைப்பற்றினார்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.