கன்னியாகுமரி தொகுதி எம்பியாக இருந்த வசந்த குமார் கடந்த மாதம் 28ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது நினைவாக இன்று அகஸ்தீஸ்வரத்தில் நினைவு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் அகஸ்தீஸ்வரம் விநாயகர் கோயில் முன்பு தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட அவரது படம் வைக்கப்பட்ட வாகனம் முன்செல்ல மௌன ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வலத்தில் வசந்தகுமார் மகன் வினோத் வசந்த் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் உள்பட 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் பேரூராட்சி அலுவலகம், கீழச்சாலை என நான்கு சாலைகள் வழியாக சென்று வசந்த குமாரின் சமாதி அமைந்துள்ள இடத்தை அடைந்தது. அங்கே அவரது சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க:தென் மண்டல கலாசார மையத்தின் இயக்குநர் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்!