ETV Bharat / state

தனியார் மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கரோனா உறுதி! - Carona

கன்னியாகுமரி: தனியார் மனநல காப்பகத்தில் தங்கியிருக்கும் 46 மனநோயாளிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் தனியார் மனநல காப்பகத்தில் 46 மனநோயாளிகளுக்கு கரோனா தோற்று

author img

By

Published : Mar 29, 2021, 7:55 PM IST

குமரி மாவட்டம் அடுத்த பொத்தையடி பகுதியில் தனியார் மனநல காப்பகம் உள்ளது. காப்பகத்தின் உரிமையாளர் உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அவரது காப்பகத்தில் மருத்துவமனை அலுவலர்கள் சென்று சோதனை செய்தபோது, மருத்துவமனையில் இருந்த 86 மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 46 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் 46 பேரும் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் காப்பகத்தில் மீதமிருந்த 40 மனநோயாளிகள் தனித்தனியாக வைத்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

குமரியில் தனியார் மனநல காப்பகத்தில் ஒரேநாளில் 40 பேருக்கு கரோனா தொற்று இருந்தது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'கரோனா பாதிப்பு அதிகரிப்பு: அத்தியாவசியப் பணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.