கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கார்த்திகைவடலி பகுதியைச் சேர்ந்தவர் அபிஷாந் (24). இவர் மீது ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி காவல் நிலையங்களில் அடிதடி, கொலைமுயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சமீபத்தில் வடக்கு சூரங்குடியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் கைதாகி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்று அபிஷாந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இராஜாக்கமங்கலம் காவல் துறையினர் அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவர்- மனைவி தூக்கிட்டு தற்கொலை!