ETV Bharat / state

கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல் - வில்சன் உதவி ஆய்வாளர்

கன்னியாகுமரி: துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உடற்கூறாய்வின்போது ஆறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது தற்போது தெரியவந்திருக்கிறது.

police
police
author img

By

Published : Jan 9, 2020, 10:29 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த உதவி ஆய்வாளர் வில்சனின் உடல், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

உதவி ஆய்வாளருக்கு ஏற்கெனவே மார்பு, வயிறு, தொடை ஆகிய மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த நிலையில், இடுப்பில் ஆழமான கத்திகுத்து காயம் இருந்தது உடற்கூறாய்வில் கண்டறியப்பட்டது. மேலும் தொடை, கால் உள்பட உடலில் ஐந்து இடங்களில் கத்தியால் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் வில்சன் உடலில் ஆறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

வில்சனை துப்பாக்கியால் சுட்டவர்கள் அவர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், கத்தியாலும் குத்தி கொலையை அரங்கேற்றியிருப்பது உடற்கூறாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே வில்சனை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், கொலை நடந்த பகுதி அதன் சுற்றுப்புறங்களில் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி ஏதும் உள்ளதா? எனவும் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: எஸ்ஐ சுட்டுக் கொலை - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் துப்பாக்கியல் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ. வில்சனின் உடலில் பிரேத பரிசோதனையின்போது 6 இடங்களில் கத்தி குத்து காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

Body:குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த படந்தாலுமூடு சோதனை சாவடியில் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த எஸ்.எஸ்.ஐ. வில்சனின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக போலீஸார் கருதிய நிலையில் பிரேத பரிசோதனை முடிவின் போது அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே மார்பு, வயிறு, தொடை ஆகிய 3 இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த நிலையில், இடுப்பில் ஆழமான கத்தி குத்து காயம் இருந்தது கண்டறியப்பட்டது. இதைப்போல் மேலும் தொடை, கால் உள்பட உடலில்5 இடங்களில் கத்தியால் கீறப்பட்டிருந்தது. இதனால் 6 இடங்களில் வில்சன் கத்தியால் குத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

வில்சனை துப்பாக்கியால் சுட்டவர்கள் அவர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்து விடக்கூடாது என்ற நோக்கில் கத்தியாலும் குத்தி கொலையை அரங்கேற்றியிருப்பது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் ஏற்கனவே துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் கொலை நடந்த பகுதி, மற்றும் சுற்றுப்புறங்களில் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி ஏதும் உள்ளதா? எனவும போலீஸார் விசாரணை மேற்கெண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.