ETV Bharat / state

மனைவியை கொலை செய்த கணவன் கைது - குற்றச் செய்திகள்

நாகர்கோவிலில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 14, 2022, 11:21 AM IST

கன்னியாகுமரி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாகதேவி பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (29). இவரது மனைவி ரெஜினா பானு (26). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைக்காக வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததாகவும் அவரை முகமது உசேன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து நேசமணிநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, மனைவி ரெஜினா பானுவை கணவர் முகமது உசேன் கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் முகமது உசேனை கைது செய்தனர். அவர் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

“எனக்கும் ரெஜினா பானுவுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் குமரி மாவட்டத்தில் வேலைக்கு வந்தோம். தற்போது நான் புன்னைநகர் பகுதியில் தங்கி ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று நான் வேலைக்குச் சென்று விட்டு வந்தபோது எனக்கும் எனது மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது எனது மனைவி ரெஜினா பானு தற்கொலை செய்வதாக கூறி கழுத்தில் துணியை வைத்துக்கொண்டு என்னை மிரட்டினார். அப்போது நான் அவரை சமாதானம் செய்தேன். தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையில் எனது மனைவியை கழுத்தை நெறித்தேன்.

அப்போது அவர் இறந்துவிட்டார். உடனே அவரை தூங்குவதுபோல் போட்டு விட்டு நானும் தூங்கினேன். மறுநாள் காலையில் குழந்தைகளும் கண் விழித்தனர். அப்போது, தாயார் எழும்பாததால் என்னிடம் கேட்டனர். அப்போது குழந்தைகளிடம் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினேன். பின்னர் ரெஜினா பானுவை அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.

அங்கு எனது மனைவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்றார். இதனையடுத்து முகமது உசேன் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: சொத்து பிரச்சினை காரணமாக உறவினர் கத்தியால் குத்தி கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.