குமரி: தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான பனச்சமூடு புளியுர்சலை பகுதியில், கோபி என்பவரது வீட்டிலுள்ள கிணற்றில் கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக தண்ணீரில் பெட்ரோல் நாற்றம் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து அதில் நெருப்பை வைத்து சோதித்தபோது, நெருப்பு படர்ந்து எரிந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அலுவலர்களுக்குத் தகவல் அளித்தார். தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் இந்த வீடும் கிணறும் அமைந்துள்ளது. இந்த வீட்டின் எதிரே தனியார் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் பங்ககில் பதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் சேமிப்பு கலனில் இருந்து கசிவு ஏற்பட்டு கிணற்றில் பெட்ரோல் கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கேரளா பாறசாலை காவலர்கள், தமிழ்நாடு பளுகல் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டு விழா!