கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன 16 மீனவர்களை தேடிக்கண்டுபிடிக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுடன் பேசி வருவதாக தெரிவித்ததார்.
குமரி மாவட்டத்தில் படித்தவர்கள் அதிகம் இருப்பதால், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தனியார் தொலைத்தொடர்பு ஊழியர்கள் பணி நிமித்தமாக வாகனங்களில் வெளியில் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடையாள அட்டையை காட்டி சென்று வரலாம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: தடுப்பூசிக்காக குவிந்த மக்கள்: அரசு மருத்துவமனையில் தொற்று பரவும் இடர்