ETV Bharat / state

செல்போனில் பாலியல் தொந்தரவு தந்த நபர் - கட்டி வைத்து உதைத்த மக்கள்! - people

கன்னியாகுமரி:   செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை மக்கள் கட்டிவைத்து உதைத்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டி வைத்து உதைத்த மக்கள்
author img

By

Published : Jun 8, 2019, 10:03 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் ஒரு மாதத்திற்கு முன்பு மனைவிக்காக துணிக்கடை ஒன்றை அமைத்து கொடுத்ததையடுத்து, அதனை அவரது மனைவி நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு துணி வாங்குவது போன்று ஈசன்தங்கு பகுதியைச் சேர்ந்த ராம்பிரபு (37) கடைக்கு வந்துள்ளார். அன்றைய தினமே, சுப்பிரமணியின் மனைவியிடம் இரட்டை அர்த்த வார்த்தைகளால் பேசியிருக்கிறார். இதனால் அன்று கடையிலிருந்து விரட்டப்பட்ட அவர், விளம்பரப் பலகையிலிருந்து சுப்பிரமணியன் மனைவியின் செல்போன் நம்பரை எடுத்துச் சென்றதோடு அன்று இரவிலிருந்தே தொலைப்பேசி வாயிலாகத் தொடர் பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்துள்ளார்.

கட்டி வைத்து உதைத்த மக்கள்

இதனைப் பலமுறை கண்டித்தும் கேட்காத நிலையில், கோட்டாறு காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் இது சைபர் குற்றப்பிரிவு காவலர்களால் விசாரிக்கப்பட வேண்டியது என அலட்சியம் காட்டியுள்ளனர். ராம்பிரபு கொடுத்த தொடர் தொல்லைகளால், சுப்பிரமணியனும் அவரது மனைவியும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இதனால் அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கலாம் என்கிற எண்ணத்தில் வேறொரு எண்ணிலிருந்து சுப்பிரமணி வேறு ஒரு பெண் மூலம் பேசி அந்த நபருக்கு வலை வீசியுள்ளார். இதில், எந்தவித சந்தேகமும் இல்லாத நிலையில் ராம்பிரபு இச்சை கொண்டு சுப்பிரமணியனின் துணிக்கடை அருகே வந்துள்ளார்.

அப்பொழுது, அங்கு ஒளிந்திருந்த சுப்பிரமணி, அவரது நண்பர்கள் ராம்பிரபுவை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களைச் சரமாரியாகத் தாக்கி ராம்பிரபு அங்கிருந்து ஓடியுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள், ராம்பிரபுவை விரட்டி பிடித்து, கட்டி வைத்ததோடு அடியும் கொடுத்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த கோட்டார் காவல்துறையினர், ராம்பிரபு-வை மீட்டு காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

இந்த நபர் குறித்து முன்பே புகார் அளித்தும் கோட்டார் காவல்துறையினர் கண்டுகொள்ளாததால்தான் இப்பிரச்னை இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

TN_KNK_03_07_SEXUAL HARASSMENT_ARRESTED_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மனைவியின் தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த ரோமியோ பொறிவைத்து பிடித்த கணவன். போலீஸாரின் மெத்தனப் போக்கால் தொலைபேசியில் தொடர்ந்த பாலியல் தொல்லை. தட்டிக்கேட்ட பொதுமக்களை தரக்குறைவாக பேசிய போலீசாரால் பரபரப்பு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் ஒரு மாதத்திற்கு முன்பு மனைவிக்காக நாகர்கோவில் பகுதியில் துணிக்கடை ஒன்றை அமைத்துள்ளார் துணிக்கடையில் மனைவி பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு துணி வாங்குவது போன்று ஈசன்தங்கு பகுதியை சேர்ந்த ராம்பிரபு (37)வந்துள்ளார். அன்றைய தினமே சுப்பிரமணியின் மனைவியிடம் துணி வாங்குவது போன்று இரட்டை அர்த்த வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் அன்று கடையில் இருந்து விரட்டப்பட்ட நபர் கடைக்கு வெளியே இருந்த விளம்பரப் பலகையில் இருந்து சுப்பிரமணியின் மனைவியின் செல்போன் நம்பரை எடுத்து சென்றதோடு அன்று இரவில் இருந்தே தொலைபேசி வாயிலாக தொடர் பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்துள்ளார் . இதனைப் பல முறை கண்டித்தும் கேட்காத நிலையில் தனது கணவர் சுப்பிரமணியனிடம் இதுகுறித்து கூறியுள்ளார் மனைவி. இந்நிலையில் ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் தொல்லை கொடுத்து வருவது குறித்து கோட்டாறு காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் இந்த புகாரானது சைபர் கிரைம் போலீசாரால் விசாரிக்கப்பட வேண்டியது என அலட்சியம் காட்டிய நிலையில், தொடர்ந்து தொலைபேசியில் தொல்லை கொடுத்து வந்த ராம்பிரபு -வால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார் சுப்பிரமணியனின் மனைவி. இதனால் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க லாம் என்கின்ற எண்ணத்தில் வேறொரு எண்ணிலிருந்து சுப்பிரமணி வேறு ஒரு பெண் மூலம் பேசி அந்த நபருக்கு வலை வீசி உள்ளார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லாத நிலையில் அந்த நபரும் காம ஆசைக்கொண்டு நாகர்கோவிலில் சுப்பிரமணியனின் துணிக்கடைக்கு வந்துள்ளார். இதனை ஒளிந்திருந்து சுப்பிரமணி மற்றும் அவரது நண்பர்கள் பிடிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் பிடிக்க முயன்றவர்களை சரமாரியாக தாக்கி ராம்பிரபு அங்கிருந்து ஓடியுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் விரட்டி பிடித்து அவனை கட்டி வைத்ததோடு அடியும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இத் தகவல் அறிந்து கோட்டார் போலீசார் சம்பவ இடத்தில் வந்தனர். அங்கிருந்து ராம்பிரபு வை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். கடந்த திங்கட்கிழமை இந்த நபர் குறித்து புகார் அளித்தும் கோட்டார் போலீசார் கண்டு கொள்ளாத நிலையின் காரணத்தால்தான் இந்த பிரச்சனை இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விஷுவல் - செல் போனில் செக்ஸ் தொந்திரவு கொடுத்த நபரை பிடித்து கட்டி வைத்த பொதுமக்கள்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.