ETV Bharat / state

ஆர்டிஒ அலுவலகம் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்! - ஆர்டிஒ அலுவலகம் இடமாற்றம் கண்டித்து போராட்டம்

நாகர்கோவில்: விஸ்வாசபுரத்தில் இயங்கி வரும் ஆர்டிஒ அலுவலகத்தை குலசேகரம்புதூருக்கு மாற்ற திட்டமிட்டிருக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து மனித பாதுகாப்பு அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்டிஒ அலுவலகம் இடமாற்றம் கண்டித்து போராட்டம்!
author img

By

Published : Aug 8, 2019, 6:10 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் 12 மைல் தொலைவில் தோவாளை அருகே உள்ள விஸ்வாசபுரத்தில் மாவட்ட ஆர்டிஒ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வாகன தணிக்கை, லைசன்ஸ் வழங்க பொது மக்களிடம் இருந்து அதிகளவில் பணம் லஞ்சமாக பெறப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அடிக்கடி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத பணங்களை கைப்பற்றிவருகின்றனர்.

ஆர்டிஒ அலுவலகம் இடமாற்றம் கண்டித்து போராட்டம்!

இதனையடுத்து விஸ்வாசபுரத்தில் உள்ள ஆர்டிஒ அலுவலகத்தை மாவட்டத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள குலசேகரம்புதூருக்கு மற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித பாதுகாப்பு அமைப்பினர் நாகர்கோவிலில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Intro:
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் விஸ்வாசபுரத்தில் இயங்கி வரும் ஆர்.டி,ஒ. அலுவலகத்தை அங்கிருந்து வெகு தூரத்தில் ஒதுக்குபுறமாக உள்ள குலசேகரம்புதூருக்கு மற்ற திட்டமிட்டு உள்ள தமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் மனித பாதுகாப்பு அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் 12 மைல் தொலைவில் தோவாளை அருகே விஸ்வாசபுரத்தில் ஆர்.டி,ஒ. அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் வாகன தணிக்கை, லைசன்ஸ் வழங்க பொது மக்களிடம் இருந்து அதிகஅளவில் பணம் லஞ்சமாக பெறப்படுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் இருந்து வருகிறது.
இதனால் அடிக்கடி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஏராளமான கணக்கில் வராத பணங்கள் கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் விஸ்வாசபுரத்தில் உள்ள ஆர்.டி,ஒ. அலுவலகத்தை வெகு தூரத்தில் ஒதுக்குபுறமாக உள்ள குலசேகரம்புதூருக்கு மற்ற திட்டமிட்டு உள்ள தமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் மனித பாதுகாப்பு அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டு கி.மீ. தூரத்தில் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்றும் இப்படி தொலை தூரத்திற்கு ஒதுக்குபுறமாக கொண்டு சென்றால் பெண்கள் சென்று வர மிகவும் சிரமம் மட்டுமின்றி பாதுகாப்பு கேள்விகுறியாகி விடும் என்றும் போராட்ட குழுவினர் தெரிவித்தனர். லஞ்சம் தடையின்றி நடக்கவே இந்த ஒதுக்குபுற இடமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மனித பாதுகாப்பு கழக தலைவர் ஜெயமோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.