கன்னியாகுமரி: முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து புனித நீராடும் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை ஆகிய மூன்று நாட்களில் நீர் நிலைகளில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கன்னியாகுமரியிலும் ஆண்டுதோறும் பக்தர்களுடைய இந்த புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மஹாளய அமாவாசையினை முன்னிட்டு அதிகாலை முதலே முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் வேத விற்பனர்கள் உதவியுடன் பச்சரிசி, தர்ப்பை, எள் போன்ற பூஜைப்பொருட்களை வைத்து, தங்கள் முன்னோர்களை நினைத்து பலர் தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் புனித நீராடினர். இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பக்தியோடு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விடுமுறை நாள் என்பதால் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்து சூரிய உதயத்தையும் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதி உதவியாக 920 கோடியே 58 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்