ETV Bharat / state

இளைஞர்கள் ஜனநாயக கடமை ஆற்ற, சிறப்பு ரயில் கோரிக்கை!

கன்னியாகுமரி: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் வாக்களிக்க வரும் இளைஞர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என குமரி ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

parlement election
author img

By

Published : Apr 13, 2019, 8:16 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கல்வி அறிவில் சிறந்து விளங்க கூடிய மாவட்டமாக இருக்கிறது. எனினும் உரிய வேலை வாய்ப்பு இல்லாததால் குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மேலும், மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே, தேர்தலை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் தங்கி பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவும் வாக்குப்பதிவு செய்யவும் சொந்த ஊர்களுக்கு வர இருக்கின்றனர்

கன்னியாகுமரி சிறப்பு ரயில்

இதனால், இவர்களின் வசதிக்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, வழியாக குமரி மாவட்டத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என குமரி ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம், மதுரை வழியாக நாகர்கோவிலுக்கும், சென்னை எழும்பூரில் இருந்து சிதம்பரம், தஞ்சாவூர், மதுரை வழியாக நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

காரைக்காலில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி வழியாக நாகர்கோவிலுக்கும், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும். அதே போல தேர்தல் முடிந்ததும் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லத்தக்க வகையில் மறு மார்க்கத்திலும் இந்த சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் வசிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என குமரி ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Body:குமரி மாவட்டம் அதிக கல்வி அறிவு பெற்ற மாவட்டமாகும். எனினும் கற்ற கல்விக்கு ஏற்ற உரிய வேலை வாய்ப்புகள் இல்லாததால் குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அதேபோல கல்லூரி படிப்பிற்காக ஏராளமான மாணவர்கள் வெளி மாவட்டங்களில் தங்கி உயர் கல்வி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் தங்கி வேலை பார்க்கும் மற்றும் படிக்கும் இளைஞர்கள் சொந்த ஊருக்கு வந்து வாக்குப்பதிவு செய்ய உள்ளனர் இவர்களின் வசதிக்காக சென்னை, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி வழியாக குமரி மாவட்டத்திற்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என குமரி ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம், மதுரை வழியாக நாகர்கோவிலுக்கும், சென்னை எழும்பூரில் இருந்து சிதம்பரம், தஞ்சாவூர், மதுரை வழியாக நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
மேலும் காரைக்காலில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி வழியாக நாகர்கோவிலுக்கும், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
அதே போல தேர்தல் முடிந்தும் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லத்தக்க வகையில் மறு மார்க்கத்திலும் இந்த சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.